Ads 720 x 90

TNPSC Important Notes of Geography in Tamil Medium (Part 5)

TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் புவியியல் பகுதியில் இருந்து...

1. ஒரு தீர்க்கரேகையை கடக்க சூரியன் எடுக்கும் நேரம் - 4 நிமிடம் ஆகும்.

2. ஜூன் 21 ஆம் தேதி கடக ரேகை பக்கமும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ரேகை பக்கமும் சூரியன்  நேராக வரும்.

3. புவியின் ஆறாம் 6377 கி.மீ ஆகும்.

4. புவி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது.

5. மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரு நாட்களிலும் இரவும் பகலும் சமமாக இருக்கும். இரு நாட்களிலும் பூமத்திய ரேகைக்கு நேராக பிரகாசிக்கும்.

6. அதிக சந்திரன்கள் கொண்ட கோள் சனி ஆகும். 30 சந்திரன்கள் உள்ளன.

7. வெள்ளி கோளுக்கு உள்ள வேறு பெயர்கள் - அழகின் தேவதை, மாலை நட்சத்திரம், கொம்புக்கோள் மற்றும் விடிவெள்ளி.

சந்திரன் 
1. பூமியின் ஒரே துணைக்கோள் சந்திரன் ஆகும் 

2. சந்திரன் தன் அச்சில் ஒரு முறை சுழல 27.5 நாட்கள் எடுக்கிறது.

3. சந்திரனில் உள்ள மலைகள் - லீப்னிட்ஸ் மலைகள் 

4. சந்திரனில் காற்று இல்லாததால் ஒலி பரவாது 

5. சந்திரனில் மனிதனின் எடை 1.6 பங்கு ஆகும்.

6. சந்திரனில் ஒளி புவியை வந்தடைய 1.3 நொடிகளே எடுக்கிறது.

7. சந்திரனில் டைட்டானியம் பெருமளவில் கிடைக்கிறது.

8. ஜூலை 1969 -ல் அப்பல்லோ II என்ற அமெரிக்க விண்கலம் சந்திரனுக்கு சென்றது. அதில் பயணம் சென்ற மூன்று விண்வெளி வீரர்கள்.
a. ஆர்ம்ஸ்ட்ராங் 
b. ஆல்ட்ரின் 
c. காலின்ஸ் 

10. புவியில் உயிரினங்கள் தோன்ற அடிப்படையாக விளங்குவது சூரிய ஒளி மற்றும் வெப்ப சக்தியே.

11. செவ்வாய்க் கோளை சிவப்புக் கோள் என்று அழைக்கிறோம். காரணம் அதன் மீது படிந்த சிவப்பு நிற மண்ணாகும்.

12. சனிக்கோள் மூன்று நிற வலையங்களுடன் காணப்படுகிறது.

13. கடலில் ஏற்படும் ஓதங்களுக்கு சந்திரனின் ஈர்ப்பு விசையை காரணமாகும்.

Post a Comment

0 Comments