
- நாட்டின் பொருளாதாரத்தை 8 முதல் 9 சதவீதத்துக்கு உயர்த்தினால்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறையும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி - முதலீடு
- 2008 -ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38 சதவீத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டது.
- 2011-12-ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 33.5 சதவீதமாக இருந்தது.
- தற்போது 2018 ல் 28.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானிக்கு உதவித்தொகை
- புற்றுநோயைக் கட்டுப்படுத்த 'டி-செல்' எனும் சிகிச்சை அளிக்கப்படும். அந்த வகை சிகிச்சையை மேம்படுத்துவதற்காக ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை துணை பேராசிரியராக இருக்கும் நவீன் வரதராஜன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஆராய்ச்சிக்காக டெக்ஸாஸ் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 11,73,420 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.6 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.
'தலாய் லாமா விவகாரத்தில் மாற்றமில்லை': இந்தியா
- பெளத்த மதத் துறவி தலாய் லாமா இந்திய மக்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆன்மிகத் தலைவராக விளங்குகிறார். அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவர், இந்தியாவில் ஆன்மிகப் பணிகளை மேற்கொள்வதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் - தலாய்லாமா தஞ்சம்
- திபெத் பகுதியில் இருந்து அரசியல் மற்றும் ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டு வந்த தலாய் லாமா, சீனப் படையினரின் தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு இந்திய அரசு புகலிடம் கொடுத்துள்ளது.
'இந்தியாவுக்கு நன்றி'' - தலாய்லாமா நிகழ்ச்சி
- இந்தியாவில் தஞ்சம் அடைந்ததன் 60-ஆவது ஆண்டையொட்டி, ''இந்தியாவுக்கு நன்றி'' என்ற பெயரில் தில்லியில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
வட கொரியாவுக்கு சிறப்புத் தூதர்: தென் கொரியா திட்டம்
- வட கொரியாவுடன் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், அந்த நாட்டுக்கு சிறப்புத் தூதரை அனுப்ப தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் திட்டமிட்டுள்ளார். வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையைக் கொண்டு செல்ல இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது.
வியட்நாம் அதிபர் இந்தியாவிற்கு வருகை: 3 நாள் அரசுமுறைப் பயணம்.
- வியட்நாம் அதிபர் தரன் டாய் குயாங்க், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த அழைப்பின் பேரில் மூன்று நாள் அரசு பயணமாக நேற்று இந்தியா வந்தார். வியட்நாம் அதிபர் வருகை மூலம் இரு நாடுகளிடையே பரபஸ்பரம் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாலாம் என தெரிகிறது.
ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் ஆப்பிள் முதலிடம்
- அப்பிள், சியோமி, ஹுவே போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைப் பிரிவில் போட்டியின்றி முதலிடத்தையும் பிடித்துள்ளது.
உருக்குப் பொருளுக்கான தேவை அதிகரிப்பு : 'இக்ரா' அறிக்கை
- நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உருக்கு பொருள்களுக்கான தேவை 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தொழில் துறைக்கு சாதகமான அம்சமாகும் என தர மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.
உருக்கு பொருள்களுக்கான தேவை
- நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் உள்நாட்டில் உருக்கு பொருள்களுக்கான தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு முதல் தங்கம்
- சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் பல பதக்கங்களை வென்று வருகின்றனர் அதன் விவரம்: இது வரை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம்) ஆகியுள்ளது.
வென்றவர்கள்
|
எடைப்பிரிவு
|
வென்ற பதக்கம்
|
நவ்ஜோத் கெளர் | 65 கிலோ | தங்கம் |
சாக்ஷி மாலிக் | 62 கிலோ | வெண்கலம் |
வினேஷ் போகத் | 50 கிலோ | வெள்ளி |
சங்கீதா | 59 கிலோ | வெண்கலம் |
0 Comments