Ads 720 x 90

Current Affairs Today in Tamil Medium - Date: 02.03.2018

Current Affairs Today in Tamil Medium: TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இது TNPSC தேர்வுக்கு மட்டும்    இல்லாமல்   TRB / TNTET / RRB / SSC / UPSC போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் உதவியாக இருக்கும் 

Current Affairs Today in Tamil Medium: Free Download PDF

முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு - நாமக்கல்: குமாரபாளையத்தில் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடக்க விழா வியாழக்கிழமை (01.03.2018) அன்று நடைபெற்றது. 

முதலாவது உலகத்தமிழ் மரபு – நடத்தியது யார்? நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மரபு மையம், தமிழ்மரபு அறக்கட்டளை (உலகலாவிய அமைப்பு), தமிழக அரசின் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தியது. 

பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா - சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: தமிழாய்வுப் பெருவிழாவின் நிறைவு விழா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் பாவேந்தர் பாரதிதாசன் இருக்கை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை (01.03.2018) அன்று நடைபெற்றன.

சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி: சென்னையில் 11.04.2018 முதல் 14.04.2018 வரை நடைபெறவுள்ள ராணுவத் தளவாட கண்காட்சியில் பங்கேற்பதாக 42 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி சிறப்பம்சம் : சென்னையில் நடைபெறவுள்ள கண்காட்சியில், ராணுவத் தளவாட உற்பத்தியில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன. இதேபோன்று, இதுவரை 42 நாடுகள் கண்காட்சியில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளன. 
இந்த கண்காட்சியில், ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்ள நாடுகள் தங்களது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதை உலகுக்கு பறைசாற்றும் விதமாக, இந்த கண்காட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில உணவு பாதுகாப்பு ஆணையம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு: மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தினை உருவாக்கி அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு தப்புவோர் சொத்து பறிமுதலுக்கு மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்: இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பிவிடும் மோசடியாளர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வழிவகுக்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (01.03.2018) ஒப்புதல் அளித்தது.

நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையம் (என்ஏஎஃப்ஆர்ஏ): தவறிழைக்கும் தணிக்கையாளர்களைக் கண்காணிக்க தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (என்ஏஎஃப்ஆர்ஏ) ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கதேசத்தில் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷியா கூட்டு முயற்சியில் அமைகிறது: வங்கதேசத்தின் ரூப்பூர் பகுதியில் அமையவுள்ள புதிய அணுமின் நிலையத்தின் கட்டமைப்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, ரஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
வங்கதேசத்தில் முதல் அணுமின் நிலையம்: வங்கதேசத்தில் அமையப்போகும் முதல் அணுமின் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உடன்படிக்கை ரஷியாவின் மாஸ்கோ நகரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தரப்பில் அந்நாட்டுக்கான தூதரக அதிகாரி பங்கஜ் சரண் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல் அணுமின் நிலையத்தின் சாராம்சம்: வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ரூப்பூரில் 2,400 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தலா 1,200 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகளை அங்கு நிறுவவும் திட்டமிட்டது. அந்த உலைகளை ரஷியா அமைக்க உள்ளது.
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகாததால் அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அணு உலைகளை நிறுவும் பணிகளை இந்தியா மேற்கொள்ள முடியும். அதன் அடிப்படையில், மூன்று நாடுகளிடையே உடன்படிக்கை கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கர்நாடகத்தில் உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்கா: கர்நாடகத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின் பூங்காவை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்தார். கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு சூரிய சக்தி பூங்கா திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின் பூங்கா – சிறப்பம்சம்2,300 விவசாயிகளிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம் வீதம் 28 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள விளைநிலத்தில் இப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குத்தகை தொகை 2 ஆண்டுக்கு ஒருமுறை 5 சதவீதம் உயர்த்தப்படும்

அமெரிக்க தகவல் தொடர்புத் துறை தலைவர் திடீர் ராஜிநாமா: அமெரிக்காவின் மிக முக்கியமான அரசுப் பொறுப்புகளில் ஒன்றான தகவல் தொடர்புத் துறை இயக்குநர் பதவியை வகித்து வந்த ஹோப் ஹிக்ஸ் (29), ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் மார்ச் 9-ல் இந்தியா வருகை: நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் மார்ச் 9-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்தழைப்பு பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஜெய்தாபூர் அணுமின்நிலையம் குறித்த இரு நாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

மோரீஷஸில் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தர நடவடிக்கை: துணைஅதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி: மோரீஷஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் மொழி கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.
மோரீஷஸ் நாட்டில் 12 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே கற்கின்றனர். இதனால், தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியைக் கற்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை மோரீஷஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – பதக்கம் வென்றவர்கள் பட்டியல் விவரம்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் மற்றும் விராங்கனைகள் பங்கு பெற்று இதுவரை நான்கு பதக்கங்கள் வென்றுள்ளனர். அதன் விவரம்:
வென்றவர்கள் பெயர்
எடைப் பிரிவு
வென்ற பதக்கம்
வினேஷ் போகட்
50 கிலோ
வெள்ளி
சங்கீதா
59 கிலோ
வெண்கலம்
ஹர்பிரீத் சிங்
82 கிலோ
வெண்கலம்
ராஜேந்திர குமாரர்
55 கிலோ
வெண்கலம்

Post a Comment

0 Comments