உயர்நீதிமன்றம் என்பது ஒரு மாநிலத்தின் உச்ச நீதித்துறை மற்றும் மேல்முறையீட்டு நீதித்துறை அமைப்பாகும். சட்டப்பிரிவு 214-ன் படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒர் உயர் நீதிமன்றம் இருக்கவேண்டும். இருப்பினும், சட்டப்பிரிவு 231 ன் படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றம் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.
- இந்தியாவில் மொத்தம் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன, ஆறு உயர் நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன.
- யூனியன் பிரதேசங்களுக்கிடையில் டெல்லிக்கு மட்டும் சொந்தமாக உயர்நீதிமன்றம் உள்ளது.
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
Post a Comment