Ads 720 x 90

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருள்கள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 14 பிளாஸ்டிக் பொருள்கள்
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது, விற்பனை, உற்பத்தி செய்வதற்கான தமிழக அரசின் தடை செவ்வாய்க்கிழமை முதல் (ஜனவரி 1, 2019) அமலுக்கு வருகிறது.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பை, கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (ஜன. 1) தடை விதிக்கப்படும் என உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்: உணவுப் பொருள்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், நீர் நிரப்பப் பயன்படும் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேனீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள்

Post a Comment

0 Comments