-->

இஸ்ரோவின் விண் மனிதன் திட்டம்

இஸ்ரோவின் விண் மனிதன் திட்டம்
விண் மனிதன் திட்டத்தின் முதல்படியாக, 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்குச் செலுத்தப்படும். அடுத்தகட்டமாக, 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இரண்டாவது ஆளில்லா விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மனிதனை சுமந்து செல்லும் விண்ணூர்தி விண்ணுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் மாதத்துக்குள் விண்ணில் செலுத்த வசதியாகவே 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் விண் மனிதன் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ரூ.9023 கோடி செலவிடப்படும். 

விண் மனிதன் திட்டத்துக்கு பயிற்சி
விண் மனிதன் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும். இறுதிக்கட்டப் பயிற்சி ரஷியா போன்ற வெளிநாடுகளில் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், உலக அளவில் இச் சாதனையை புரிந்த 4-ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவைச் சேரும் என்றார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting