Type Here to Get Search Results !

பாலின விகிதாசார பட்டியல்: ஐஸ்லாந்து முதலிடம்


பாலின விகிதாசார பட்டியல்: ஐஸ்லாந்து முதலிடம் 
உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎஃப்) வெளியிட்ட பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. டபிள்யூஇஎஃப் 18.12.2018 அன்று இந்தப் பட்டியலை வெளியிட்டது. பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் உயிர்வாழ்தல் ஆகிய 4 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியலில் பல்வேறு நாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
  • பாலின விகிதாசார பட்டியலில் ஐஸ்லாந்து 85.8 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 10-ஆவது முறையாக முதலிடத்தில் இந்நாடு உள்ளது.
  • நார்வே 83.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஸ்வீடன் 82.2 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • பின்லாந்து 4-ஆவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா கடந்த ஆண்டிலும் 108-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Labels