பாடம் - கனவு பலித்தது
கடல் நீர் ஆவியாகி மேகமாகும் பின் மேகம் குளிர்ந்து மழை பொழியும் என்று குறிப்பிட்ட தமிழ் இலக்கியங்கள்
- முல்லைப்பாட்டு
- பரிபாடல்
- திருக்குறள்
- கார் நாற்பது
- திருப்பாவை
திரவப்பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்று ஔவையார் கூறிய பாடல்
"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி"
மருத்துவம், அறிவியல் பற்றி தமிழ் நூல்களில் இடப்பெற்ற பாடல்கள்
- போர்க்களத்தில் வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்து இடம்பெற்ற நூல் - பதிற்றுப்பத்து
- சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்ற நாள் - நற்றிணை
- தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கலிலியோவின் கருத்தை கபிலர் தனது திருவள்ளுவமாலையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவம், அறிவியல் பற்றி தமிழ் நூல்களில் இடப்பெற்ற பாடல்கள்
தொல்காப்பியம்
நிலம் தீ நீர் வளி வீசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
கார் நாற்பது
கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி...
பதிற்றுப்பத்து
நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.
நற்றிணை
கொட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்