-->

TNPSC: General Science Important Questions - 5

                  அறிவியல் -  போட்டித்தேர்வுக்கான முக்கிய  வினா விடைகள்

தாவரங்களில் இனப்பெருக்கம்
 1. ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று -  இரண்டாகப் பிளத்தல்
 2. பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச்சேர்க்கை
 3. பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
 4. கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி - திரள் கனி
 5. நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது - மைக்ரோபைல்
 6. மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
 7. கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
 8. காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று - டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
 9. மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது - கருவூண்
 10. தன் மகரந்த சேர்க்கையின் தீமை - விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உண்டாகின்றன.
 11. பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோ பேசிலஸ்
 12. கட்டிப் போட்டால் குட்டிப்பேடும் தாவரம் - பிரையோஃபில்லம்.
 13. ஹைடிராவில் நடைபெறும் இனப்பெருக்கமுறை -  அரும்புதல்
 14. ஆல்காக்களில் காணப்படும் நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் -- ஏபிளனோஸ்போர்கள்
 15. மலரின் ஆண்பாகம் - மகரந்தத்தாள் வட்டம்
 16.  நகரும் தன்மையற்ற ஸ்போர்கள் - கொனிடியா
 17. மகரந்தப்பையிலிருந்து மகரந்த தூள்கள் சு10லக முடியை சென்றடையும் செயல் - மகரந்த சேர்க்கை
 18. ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடையும் நிகழ்ச்சி - ஆட்டோகேமி
 19. அயல் மகரந்த சேர்க்கைக்கு மறுபெயர் - அல்லோகேமி
 20. பறவைகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு ஆர்னிதோஃபிலி என்று பெயர்
 21. முழுமையடைந்த கருவுற்ற முட்டை - சைகோட்
 22. கருவுறுதலுக்குப்பின் சூல் விதை ஆகவும், சூல் உறைகள் கனி ஆகவும் மாறும்
 23. கருவுற்ற முதிர்ந்த சூற்பை கனி எனப்படும்.
 24. கருவுறாக் கனிகள் பார்த்தினோ கார்பிக் கனிகள் எனப்படும்.
 25. வாழ்க்கை இயக்கக் செயல்கள்
 26. மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் - மைக்கோரைசா வேர்கள்
 27. ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது - எத்தனால்
 28. நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன - நீர் சார்பு இயக்கம்
 29. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்
 30. தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது -  நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
 31. செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி - லூமன்
 32. ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு - ஹாஸ்டோரியம் என்று பெயர்
 33. நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
 34. காற்றிலா சுவாசம் நொதித்தல் என அழைக்கப்படுகிறது.
 35. ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது - யுவீ
 36. மீன்கள் செவுள்கள் மூலம் சுவாசிக்கிறது.
 37. தாவரக் கழிவுகள் செல்களில் சேமிக்கப்படும் இடம் - வாக்கியோல்
 38. நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
 39. தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது - வேரழுத்தம்.
 40. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் - ஹார்மோன்கள்
 41. வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது - நெப்ரீடியங்கள்
 42. ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு -விஸ்வம்இகஸ்குட்டா
 43. சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி -  நொதித்தல்
 44. நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி - ஈஸ்ட்
 45. சுற்றுச் சூழல் பாதுகாப்பு
 46. சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு - புல், மலர்கள், தோல்
 47. உணவுச் சங்கிலி - புல், ஆடு, மனிதன்
 48. கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது - பெட்ரோலியம்
 49. பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு - உயிரி பிளாஸ்டிக்
 50. கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.
 51. பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.
 52. மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் - பொட்டாசியம் அயோடைடு
 53. படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு -  கரி
 54. கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் -  54 சதவீதம்.
 55. உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை - தலைகீழ் சவ்வூடு பரவல்
 56. ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் - சிலிகான் சார்ந்த பொருள்
 57. ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் - கிர்தேசியப்பூங்கா
 58. எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் - தார்பந்துகள்.
 59. ஜோகன் மெண்டல் - பாரம்பரிய கடத்தல்
 60. பட்டாணிச் செடி - பைசம் சட்டைவம்
 61. எட்வர்ட் ஜென்னர் - தடுப்பூசி
 62. டாக்டர் ஐயர்ன் வில்மூட் - டாளி
 63. உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.
 64. ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.
 65. லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் - ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் 
 66. வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது  தேவையும் எண்ணமுமே ஆகும்.
 67. ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.
 68. அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.
 69. ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக: 1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்
 70. கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது
 71. தைராக்ஸின் - ஆளுமைஹார்மோன்
 72. அட்ரீனலின் - அவசரக்கால ஹார்மோன்
 73. ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
 74. குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்
 75. அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை - குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.
 76. மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை - பாக்கிடீன்
 77.  பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
 78. சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
 79. பெரு மூளையின் பணிகள் - உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
 80. தைராக்ஸின் பணிகள் - உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
 81. அட்ரீனல் ஹார்மோன்களின் பணிகள் - இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கின்றன. சுவாசவீதத்தை அதிகரிக்கின்றன.
 82. ரிலாக்ஸினின் பணி - மகப்பேறின்போது இடுப்புப் பகுதித் தசைகளைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது.
 83. உடலின் மாஸ்டர் கெமிஸ்ட் என்று சிறுநீரகம் அழைக்கப்படுவதற்கான காரணம்: சிறுநீரகம் இரத்தத்தின் வேதிபொருட்களின் சமநிலையை பேணுகிறது.
 84. வெட்டும்பற்கள் - யானையின் தந்தம்
 85. ரோமம் - முள்ளம்பன்றியின் முட்கள்
 86. குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும் துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
 87. உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு பூனை மற்றும் நாய்
 88. மிட்ரல்வால்வு இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
 89. ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்: இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
 90. கார்டியாக் தசையினால் மனித இதயம் சுருங்கி விரிகிறது.
 91. சராசரி மனிதனின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
 92. இதயத்தின் அறை சுருங்கும் நிலை - சிஸ்டோல்
 93. இதயத்தின் அறை விரிவடையும் நிலை - டயஸ்டோல்
 94. பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள் - வெளவால்
 95. கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
 96. சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு - சிறுநீர். கழிவுப் பொருட்கள் - யூரியா, யூரிக் அமிலம்
 97. நுரையீரல் வெளியேற்றும் கழிவு - வெளியேற்றப்படும் காற்று - கழிவுப்பொருட்கள் - கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
 98. தோல் வெளியேற்றும் கழிவு - வியர்வை. கழிவுப் பொருட்கள் - அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
 99. சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம்.
 100. லாக்டிக் அமிலம் என்பது 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
 101. தொட்டல் சிணுங்கி - வளர்ச்சி சாரா இயக்கம்
 102. தொட்டல் சிணுங்கி தாவரத்தின் நரம்பு மண்டலமோ தசைகளோ இல்லை. ஆனால் இத்தாவரத்தை தொட்டால் அனைத்து இலைகளும் சுருங்குவதற்கு காரணம் தாவரச் *  செல்களில் உள்ள நீரின் அளவில் ஏற்படும் மாறுதல் மேலும் தூண்டிலுக்கு உடனே பதில் வினை.
 103. மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக நுறையீரலுக்குள் செல்கிறது.
 104. மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
 105. சிதைவடையும் கழிவு - தோல்
 106. சிதைவடையாக் கழிவு - நெகிழி
 107. இராணுவ கழிவு - நிலத்தில் நிரப்புதல்
 108. திரவ கழிவு - ஆழ்கிணறு பாய்ச்சுதல்
 109. மருத்துவ கழிவு - எரித்து சாம்பலாக்குதல்
 110. பொட்டாசியம் அயோடைடு - மேகத்தில் தூவுதல்
 111. கருப்புத் தங்கம் - பெட்ரோல்
 112. நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே இது மட்காத கழிவு ஆகும்.
 113. மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே இது மட்கும் கழிவு ஆகும்.
 114. கதிர்வீச்சு கழிவுகளை எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
 115. நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும் பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
 116. பசுமையக வாயுவிற்கு உதாரணம் - கார்பன்டை ஆக்சைடு
 117. பசுமையாக வாயு வெளிவருவதால் காலநிலை மாறுபாட்டிற்கும், புவி வெப்பமாதலுக்கும் காரணமாகிறது.
 118. ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல் உணவுச் சங்கிலி எனப்படும்.
 119. உயிரி பிளாஸ்டிக் - மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
 120. படிம எரிப்பொருள் - நிலக்கரி
 121. பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
 122. பயோ ஆல்கஹால் என்பது - உயிரி எரி சாராயம்
 123. நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள் - ஹைட்ரஜன்
 124. மீத்தேன் வாயுவிலிருந்து உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
 125. திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன் - பெட்ரோலியம்
 126. நீரினால் உண்டாகும் நோய் - டைபாய்டு, காலரா, சீதபேதி
 127. படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம் - முதல் நிலை சுத்திகரிப்பு
 128. திரும்ப பெற இயலாத வளம் - கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
 129. சதுப்பு நிலங்களில் மீத்தேன் வாயு காணப்படுகிறது.
 130. யுரேனியத்திலிருந்து அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
 131. டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள் கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
 132. ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள் - ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
 133. இயற்கை வளங்கள் புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
 134. வைட்டமின்கள் - ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
 135. நொதிகள் - ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
 136. கரிம அமிலங்கள் - வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
 137. மூலச்செல்கள் வகைகள்: 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
 138. ஸ்டெம் செல்கள் சிறப்படையாத செல்கள், மைட்டாசிஸ் முறையில் பிளவுற்று அதிக செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.
 139. மூலச்செல்கள் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தன்மை கொண்டது. எ.கா: இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள்.
 140. மூலச்செல்கள் - ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
 141. உடல்மூலச்செல் - மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
 142. அக்டோபர் 15 கைகழுவும் நாளாக கொண்டாடப்படுகிறது.
 143. தாவர உள்ளமைப்பியல்
 144. ஆக்குத்திசுக்கள் நிலையான திசுக்களாக மாறுதல் - செல் வேறுபடுதல்
 145. தாமே பகுப்படையும் திசு - ஆக்குத்திசு
 146. ஆக்குத்திசுக்களின் செல் சுவர் - செல்லுலோசால் ஆனது.
 147. புரோகேம்பியத்திலிருந்து தோன்றுவது - முதல்நிலை வாஸ்குலார் திசுக்கள்.
 148. கார்க் கேம்பியத்தினை - ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
 149. மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் - பாரன்கைமா
 150. நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது - வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
 151. கோலன்கைமா - பலகோண வடிவம்
 152. செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் - கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
 153. கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் - ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
 154. அடுக்கு கோலன்கைமா - டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
 155. இடைவெளிக்கோலன்கைமா - ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
 156. பிரேக்கி ஸ்கிளிரைடு - கல்செல்க்கள் (பேரியின் கனி)
 157. மேக்ரோ ஸ்கிளிரைடு - கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
 158. பட்டாணியின் விதை உறை - ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
 159. Fibres நார்கள் - தாங்கு திசு
 160. சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
 161. சைலோஸ் என்ற சொல்லின் பொருள் - கட்டை
 162. முதலாம் நிலை சைலம் - புரோகேம்பியத்த்தில் இருந்து தோன்றும்
 163. இரண்டாம் நிலை சைலம் - வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
 164. டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - டிரக்கீடுகள்
 165. டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது - வரம்புடைய குழிகள்.
 166. ஒற்றைத் துளைத்தட்டு - மாஞ்சிபெரா
 167. பல துளைத் தட்டு - லிரியோடென்ட்ர்ரான்.
 168. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது - சைலக்குழாய்க்கள்
 169. சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் - நீட்டம்
 170. சைலம் நார்கள் - லிப்ரிஃபார்ம் நார்கள்.
 171. சைலத்தில் உள்ள உயிருள்ள திசு - சைலம் பாரன்கைமா
 172. புரோட்டோ ஃபுளோயம் - சிறிது காலமே உயிர் வாழும்
 173. துணை செல்கள் - டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.
 174. ஃபுளோயம் பாரன்கைமா - டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)
 175. ஃபுளோயம் நார்கள் - பாஸ்ட் நார்கள்
 176. திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் - சாக்ஸ்
 177. புறத்தோலில் உள்ள புறவளரிகள் - டிரைக்கோம்க்கள ;
 178. புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள் - டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.
 179. காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை - துணை செல்க்கள் (கரும்பு)
 180. கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை - தண்டு, இலை
 181. இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை - குக்கர்பிட்டேசி
 182. ஃபுளோயம் சூழ் சைலம் - பாலிபோடியம்
 183. சைலம் சூழ் ஃபுளோயம் - அக்கோரஸ்
 184. வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
 185. பக்க வேர்கள் - அகத்தோன்ற்றிகள் - பெரிசைக்க்கிளில் இருந்து
 186. இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது - பெரிடெர்ம்.
 187. உறிஞ்சு உறுப்பு - வேர்த்தூவிகள்
 188. வேரின் புறணியில் உள்ள கணிகம் - வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)
 189. காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் - சூபரின்
 190. காஸ்பாரியின் பட்டையின் பணி - வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.
 191. மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு - ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
 192. ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் - வேர் (நான்கு முனை சைலம் - இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் - ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
 193. அவரை வேரின் இணைப்புத்திசு - பாரன்கைமா.
 194. வேர்த்தூவிகள் - டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
 195. ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு - பெரிசைக்க்கிள்
 196. ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - ஸ்க்கிளிரன்கைமா
 197. மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி - உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
 198. கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை - ஒருவித்த்திலை தண்டு.
 199.  ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் - ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
 200. ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் - கோலன்கைமாவால் ஆனது.
 201. ஸ்டார்ச் அடுக்கு - அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
 202. பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் - யூஸ்டீல்
 203. கற்றைத் தொப்பியினை - வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
 204. ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவரத் தண்டு.
 205.  மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை - ஒருவித்திலைத் தண்டு
 206.  மேல்கீழ் வேறுபாடுள்ள இலை - இருவித்திலைத் தாவர இலை.
 207. ஒத்த அமைப்புடைய இலை - ஒருவித்திலைத் தாவர இலை.
 208. இலையின் எலும்புக் கூடு - இலை நரம்புகள், சிறு நரம்புகள்
 209. ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர இலை.
 210. வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் - இலைத்துளை
 211. மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் - இலை இடைத்திசு.
 212. பாலிசேட் பாரன்கைமாவின் பணி - ஒளிச்சேர்க்கை
 213. இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை - பாரன் கைமாவால் ஆனது.
 214. கியூட்டிகிளின் பணி - நீராவிப்போக்கினை குறைத்தல்.
 215. பித்தின் பணி - உணவினைச் சேமித்தல்.
 216. ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை - இருவித்திலைத் தாவர தண்டு.
 217. ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை - ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting