Ads 720 x 90

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 01.03.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc.

டெங்கு வைரஸ் பெருக்கத்தைத் தடுக்கும் பாக்டீரியா: புதுச்சேரியில் ஆராய்ச்சி
  • இந்தியாவில் டெங்கு பரவாமல் தடுப்பதற்கும், டெங்குவைப் பரப்பும் வைரஸ் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ’உல்பேஷியா' என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை பெருக்கம் உள்ள நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கிவிட்டாலே பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவத் தொடங்கி விடுகின்றன. 2016-ஆம் ஆண்டில் மட்டும் சிக்குன் குன்யா காய்ச்சலால் தமிழகத்தில் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் 2,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • டெங்கு, சிக்குன் குன்யா, ஸிகா ஆகிய வைரஸ்கள் அனைத்தும் ஏடீஸ் என்று அழைக்கப்படும் கொசுக்களின் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்களின் மூலம் பரவும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் முதல் கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சியின்படி, ’உல்பேஷியா' என்ற பாக்டீரியா (நுண்ணுயிரி) டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்களுக்குள் செலுத்தப்படும். இந்த பாக்டீரியாவை சுமந்து செல்லும் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, அவற்றால் டெங்கு வைரஸை பரப்ப இயலாது. இந்த வகை பாக்டீரியா 1920-ஆம் ஆண்டிலேயே மேலை நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம்
திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு
  • தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும், மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
  • இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித் தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள் உயிரிழந்துள்ளன.
  • தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின் புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு 9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால் ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும் உயிரிழந்துள்ளன. தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.
  • 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன.
  • கொல்லப்படும் புலிகள்: 2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. 
மாணவர்களுக்கான 'அம்மா கல்வியகம்' இணையதளம் தொடக்கம்
மாணவர்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கும் 'அம்மா கல்வியகம்' (www.ammakalviyagam.in) என்ற இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி
எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் அதிநவீன இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ரக ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தாக்கும் திறனுள்ள சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமல்
ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வரும் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் துர்கா பிரசாத் ஓய்வு
இந்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) தலைமை இயக்குநர் பதவியிலிருந்து துர்கா பிரசாத் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். 1981-ஆம் ஆண்டின் தெலங்கானா பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான துர்கா பிரசாத், சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். 

நாட்டின் முதல் ’ஹெலிகாப்டர்' நிலையம் தில்லியில் திறப்பு
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ’ஹெலிபோர்ட்' (ஹெலிகாப்டர் நிலையம்), தில்லியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. பொதுத் துறை நிறுவனமான ’பவான் ஹன்ஸ்' நிறுவனத்தால், தில்லியில் ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் நிலையம், தினமும் 150 பயணிகளை கையாளும் வசதியை கொண்டது. மேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடிய கட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளி நிறுத்துமிடங்களும் உள்ளன. இந்த ஹெலிகாப்டர் நிலையத்தை, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டர்களுக்கான ஒருங்கிணைந்த நிலையம் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது

இந்திய - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு 
இந்திய - இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் (28.02.2017) அன்று நடைபெற்றது. இக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சுரேஷ் கோபி., கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகர் குர்தாஸ்மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கோ ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சூரியனுக்கு நாஸாவின் விண்கலம்
சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) திட்டமிட்டுள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜிது ராய் உலக சாதனை
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய், 50 மீ. பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். தில்லியில் நடைபெற்று வரும் இந்தத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீ. பிஸ்டர் பிரிவில் 230.1 புள்ளிகள் பெற்று இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் ஜிது ராய்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், தில்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி தலைமை பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன் நியமனம்
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன்  நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளரான மரைன், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என ஹாக்கி இந்தியா அமைப்பு செவ்வாய்க்கிழமை (28.02.2017) அறிவித்தது.

பார்வையற்றோர் உலகக் கோப்பை வெற்றி: பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு
பார்வையற்றோர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இந்திய அணியினரை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களில் ஒவ்வொரு வீரருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அதை தனது சுட்டுரைக் கணக்கில் பதிவிட்டுள்ளார். பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்திய அணி பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments