Ads 720 x 90

Latest Updated Current Affairs in Tamil Medium. Date: 26.02.2017

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc

நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள்: பிரதமர் மோடி வானொலி உரை
  • பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம்  நாட்டு மக்களுக்கு இன்று (26.02.2017) வானொலியில் உரையாற்றினார். செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்தி நமது விஞ்ஞானிகள் சாதனை புரிந்தனர். அடுத்த சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை வைத்து விண்ணில் செலுத்தி உலக விண்வெளித் துறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர். அந்த செயற்கைகோள்கள் பல நாடுகளுக்கு சொந்தமானவை. எனினும் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வைத்த முதல் நாடு என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த செயற்கைகோள்களில் கார்டோசாட் -2டி நமது நாட்டுக்கு சொந்தமானது. அந்த செயற்கைகோள் அனுப்பி வைக்கும் படங்கள் மூலம் நாட்டில் உள்ள வளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நகர்புற வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகியவற்றை அடையாளம் கண்டு செயல்படுத்த முடியும். இதேபோல் இடைமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல்மட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் எதிரிகளின் ஏவுகணைகளை, நமது ஏவுகணையால் இடைமறித்து தாக்கி அழிக்க முடியும். இத்தகைய திறன் கொண்ட ஏவுகணைகள் வெறும் 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளன. 
  • உணவு தானிய உற்பத்தியில் நமது விவசாய சகோதர, சகோதரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பால் உணவு தானியங்களின் உற்பத்தி புதிய சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 2,700 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும். டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டத்துக்கு மக்கள் அனைவரும் விளம்பர தூதர்களாக செயல்பட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். 
  • டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் கறுப்புப் பண புழக்கத்தை கண்காணிக்க முடியும். லஞ்சத்துக்கு எதிரான முக்கிய பங்களிப்பாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை இருக்கும். ரொக்க பணபரிவர்த்தனையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மக்கள் மெல்ல மாறி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொண்டவர்களில் 10 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வர்த்தகர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி நூறாவது நாளை எட்டவுள்ளது. அன்றைய தினம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 126-வது பிறந்த தினமாகும். எனவே அவரது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக மொபைல் போன்களில் பீம் செயலியை 125 பேருக்கு டவுன்லோடு செய்து தர வேண்டும். 
ப. சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் 
  • முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் திங்கள், செவ்வாய் (பிப். 27,28) ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முதலாம் நாளில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார். அப்போது, 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய உள்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நிலைக் குழுவிடம் ராஜீவ் மெஹ்ரிஷி விளக்குவார். இதைத் தொடர்ந்து, 
  • இரண்டாம் நாள் கூட்டத்தின் முதல் பகுதியில், மத்திய உள்துறையின் கீழ் உள்ள மத்திய காவல் அமைப்புகள், துணை ராணுவப் படைகள், தில்லி காவல் துறை ஆகியவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிக்க உள்ளார். இரண்டாம் பகுதியில், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிப்பார்.
கலாசார நல்லிணக்க மாநாடு
அண்மையில் அறிவிக்கப்பட்ட "நமது பாரம்பரியம்' என்ற திட்டத்தின் கீழ் கலாசார நல்லிணக்க மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையிலான குழுவினர் மேற்கொள்வர். மாநாட்டை தில்லியில் அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத முதல் வாரத்தில் மாநாடு நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும் இதுபோன்ற மாநாடுகளை, மும்பை, ஹைதராபாத், லக்னௌ, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்கு தடை
சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்ற பாலிவுட் படத்துக்கு மத்திய தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. அலங்கிருதா ஸ்ரீவாஸ்தவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ பாலிவுட் படம், கடந்த ஆண்டில் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசிய எழுச்சிப் படம்’ என்ற விருதையும், மும்பை திரைப்பட விழாவில் பாலின சமத்துவம் என்ற பெயரிலும் விருதுகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர்களுக்கான முதல் சங்கம் தொடங்கப்பட்டு 71 ஆண்டு நிறைவு
இந்தியாவில் ஒயிட் காலர் ஊழியர் களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசி யேஷன் சென்னையில் 71 ஆண்டு களுக்கு முன்பு இதே நாளில்தான் தொடங்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று. 71 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (26.2.1946) இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முதல் முறையாக அலுவல் பணி ஊழியர்கள் (ஒயிட் காலர் ஒர்க் கர்ஸ்) உரிமை போராட்டத்தில் குதித்தனர். இந்த பேராட்டத்தின் விளைவாக எழுத்தர், கணக்காளர்கள் உள்ளிட்ட அலுவல் பணி ஊழியர்களுக்கான முதல் தொழிற்சங்கமான கமர்சியல் எம்ப்ளாயீஸ் அசோசியேஷன் (சிஇஏ) உருவானது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சில நாட்களில் இந்த தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது.

Post a Comment

0 Comments