TNPSC - Latest Current Affairs in Tamil Medium October 2016 - Date: 02.10.2016

TNPSC Master publishes relevant fact based Current Affairs almost daily basis. In this current affairs helps you and useful for General Awareness part of TNPSC, UPSC, SSC IBPS Banking and other State Public Service Commission examination. TNPSC Master is a compilation of recent current events. In This section is updated almost daily events, Innovation, Achievement, Awards and New Appointments etc. 

Latest Current Affairs Contains in following titles:
  • கனடா, அமெரிக்காவுக்கு ஜேட்லி இன்று பயணம்
  • இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை
  • பத்மா சுப்பிரமணியம் உள்பட மூவருக்கு விருது
  • இந்திய அதிரடித் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஐ.நா.வின் ஆதரவில்லை: சையது அக்பருதீன்
  • சீனாவின் 67-ஆவது தேசிய தினம்: பிரதமர் வாழ்த்து
  • எஸ்.பி.ஐ. (SBI) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு
  • பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: இந்தியா இன்று ஒப்புதல்
  • திபெத்தில் அணை கட்டும் திட்டம்: பிரம்மபுத்திராவின் துணை நதி நீரோட்டத்தை நிறுத்தியது சீனா
கனடா, அமெரிக்காவுக்கு ஜேட்லி இன்று பயணம்
உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும், சர்வதேச முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை தில்லியில் இருந்து புறப்படுகிறார்.

இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு பாகிஸ்தானில் தடை
பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ள நிலையில், இந்தியத் தொலைக்காட்சி சேனல்களை பாகிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு அரசு சனிக்கிழமை தடை விதித்தது.

பத்மா சுப்பிரமணியம் உள்பட மூவருக்கு விருது
மறைந்த டாக்டர் எம்.ஏ.சிதம்பரத்தின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் இலக்கியம், கலை, தொழில் துறையில் சிறந்து விளங்கும் 3 பேர், எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சார்பில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ், தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக தமிழறிஞர் ஏ.அறிவுநம்பிக்கு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, நுண்கலைத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்காக பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்துக்கு டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது, முதல் தலைமுறை தொழில்முனைவோரில் சிறந்து விளங்குவதற்காக ஸ்ரீதர் வேம்புக்கு டாக்டர் ஏ.சி.முத்தையா விருது வழங்கப்பட உள்ளது.

இந்திய அதிரடித் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஐ.நா.வின் ஆதரவில்லை: சையது அக்பருதீன்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா அதிரடித் தாக்குதல் நிகழ்த்திய விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஐ.நா.வின் ஆதரவு கிடைக்கவில்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.

சீனாவின் 67-ஆவது தேசிய தினம்: பிரதமர் வாழ்த்து
சீனாவின் 67-ஆவது தேசிய தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

எஸ்.பி.ஐ. (SBI) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை ஐந்து வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கியை இணைக்க மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியது. இதையடுத்து, வங்கிகளை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு மேலும் ஓராண்டு காலத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: இந்தியா இன்று ஒப்புதல்
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு, ஐ.நா. சபையில் இந்தியா தனது ஒப்புதலை ஞாயிற்றுக்கிழமை (அக்.2) இன்று அளிக்கவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை முன்வைத்த திட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை (01.10.2016) அன்று கையெழுத்திட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை 185 நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி ஏற்றுக் கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கையெழுத்திட்டது. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் 191 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

திபெத்தில் அணை கட்டும் திட்டம்: பிரம்மபுத்திராவின் துணை நதி நீரோட்டத்தை நிறுத்தியது சீனா
திபெத்தின் ஜியாúஸ பகுதியில் ஓடும் ஜியாபகு நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்காக, அதன் நீரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத மிகப் பெரும் தொகையான 495 கோடி யூவான் (சுமார் ரூ.4,945 கோடி) செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்தத் திட்டம், வரும் 2019-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இதனால் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு நீர்வரத்து குறையும் அபாய நிலைக்கு வாய்ப்புள்ளது.
  • ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ஜெரார்டு வான் போஹெமென்
  • ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன்


Click to comment